யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சந்திரசேகரம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
'தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'
-(திருவாசகம்)
ஆலயம் தொழுவது சாலவும் நன்றுஎன
அகமதில் உணர்ந்து ஆலயம் அமைத்து
ஆண்டுக்கு ஒருமுறை பெருவிழா எடுத்து
அதில்பல விந்தைகள் அழகாய் புரிந்து
காவடி கரகம் கற்பூரச்சட்டி என
கருத்தாய் மக்கள் கவரும் விதமாய்
கலைகள் நிறைந்த களிப்புறு விழாவாய்
பக்தியோடு பலரும் பரவசப் பட்டு நிற்க
சித்திகள் தரவல்ல விநாயகப்பெருமான்
பாரிஸ் மாநகர் வீதி உலா வரும் வேளை
உங்கள் அரும்பணி உலகம் அறிந்துநிற்கும்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்கவே உலகமெலாம்
மேதினியில் உங்கள் பணி மேலோங்கி நின்றதனால்
காசினியில் சிறந்திருக்கும் காமகோடிப்பீடம்
அருட்பணி அரசு எனும் விருதினை உமக்களித்து
ஆலய திருப்பணி அயராது தொடரவே
அன்பும் அறமும் சிறந்து மேலோங்க
அன்னதானப் பணி அயராது செய்து
சிந்தை மகிழ எந்தை விநாயகன்
இணையடி நிழலில் இருந்தீர் நீங்கள்.
எண்ணுதற்கு எட்டா எழிலார் திருவடி
கண்கள் இரண்டால் காணவே வேண்டி
மண்ணில் இருந்து வந்தவர் எல்லாம்
எண்ணில் நற்பயன் எய்தியே நிற்க
காட்சியும் கருத்தும் ஒன்றாய் நின்று
மாட்சிமை பெற்று வழிபாடு செய்ய
மாநகர் பாரிஸில் மாணிக்கவிநாயகர்
மாநிலம் போற்றும் ஆலயம் தந்தீர்.
சிந்தையும் செயலும் ஒன்றெனக்கொண்டு
சிறந்த நல் சேவை மக்களிட்கு அளித்து
பிறந்த நல் பயனை புவிஇதில் பெற்றீர்.
எண்ணிய கருமம் திறம்பட இயற்றி
பண்ணிய புண்ணியம் பலருக்கும் உதவ
கண்ணியமாகவே கருத்தறிவித்து
காலமும் நேரமும் வழாமல் புல்லி
சிந்தை மகிழும் சிறப்புகள் பெற்று
முந்தை வினையின் முழுப்பயன் பெறவே
எந்தை விநாயகன் இணையடி நிழலை
என்றுமே வணங்க பெருவழி செய்து
எம்மவர் மனங்களில் என்றுமே வாழ்வீர்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் 9வது ஆண்டு நினைவு நிகழ்வு 23-03-2022 புதன்கிழமை அன்று ஆலயத்தில் நடைபெறும் விசேட 108 கலச அபிடேகத்திலும் தொடர்ந்து இடம்பெறும் அன்னதான வைபவத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
RIP