யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சந்திரசேகரம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆலயந்தொழுவது சாலவும் நன்றென்ற
ஒளவையின் வாக்கினை அகமதில் கொண்டு
அரும்பணியாற்றி ஆலயம் அமைத்து
சிரம் அதில் செருக்கு சிறிதளவும் இன்றி
சிந்தை முமுவதும் சிறந்த நற்பணியாய்
முந்தை வினையகற்றும் மூலவிநாயகனை
எம் சிந்தை நிரப்பிடவே சிறந்த நல் பணி செய்தீர்
பிரபஞ்ச நாயகனை பிரணவத்தின் பொருளோனை
பாரிசில் பிரதிஸ்டை செய்து வைத்த பேறு பெற்றீர்
பாரிதினில் பாரிசில் தமிழர் தம் பெருமைகளை
பலரும் போற்றிடவே பல பணிகள் செய்து வைத்தீர்
மேன்னை கொள் சைவநீதி விளாங்கவே உலகமெல்லாம்
திண்மையாய் நீங்கள் செய்த தெய்வீகப் பணியினாலே
தோற்றமதில் தொன்மையாய் என்றும் புதுமையாய்
ஏற்றமிகும் எம்மரபு மேற்குலகில் சிறந்து நிற்க
மாற்றமுறும் வையகத்தில் மனநிறைவு கொள்கின்றோம்
அன்பால் அரவணைப்பால் பேணி அமுதூட்டி
ஆலயத்தில் நீங்கள் அமைத்த பல நல்விழாக்கள்
தேசத்தின் ஒற்றுமையை சிறப்பாய் எடுத்தியம்பி
தெய்வீகம் போற்றும் தமிழர் தம் பண்பாடு
தேடியே பலர் வர நாடி உழைத்தீர்
முப்பழம் நுகரும் மூசிகவாகனன்
எப்பொழுதும் எமை ஏற்று அருளவே
முப்பொழுதும் பூஜை முறையாக நிகழவே
முறையாக பல வழிகள் முன்னின்று செய்தீர்
அன்பினில் சிறந்தோங்கி அன்பினில் விழைந்த ஆரமுதாய்
தொல்லை இரும் பிறவி சூழும் தழை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்த மயமாக்கி
ஆற்றிய பணிக்காய் அருட்பணி அரசு எனும் அரிய விருது
போற்றியே நல்கிய சிவனருள் விருது
சிறப்பாய் பெற்றது எம் சிந்தைக்கு மகிழ்ச்சி
காஞ்சிப் பெரியவர் கருத்து ஒருமித்து
நல்கிய விருது நானிலம் போற்றும்
ஆனைமுகன் திருவடியில் ஆற்றிய பணிக்காய்
அடியார் மனங்களில் அமர்ந்திருக்கும் உயர்விருது
அமரர் உலகிலும் அணி செய்து ஒளிவீசும்.
14-03-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பாரிஸ் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் ஸ்தாபகர் நினைவுப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் அன்னதான நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
RIP