Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 20 MAY 1938
விண்ணில் 03 MAY 2022
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
வயது 83
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு 1938 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் மார்க்கண்டு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்றானதம்மா நீ எமைப் பிரிந்து
காலம் தோறும் நாமழுவோம் இங்கிருந்து
 எப்படி வாழ்வோமினி உனை மறந்து
எமைத் தேடி நீ வருவாயா விரைந்து
 நீயில்லாவுலகத்தில் சுவாசிக்கவும் மறக்கிறோம்
தாயில்லாப் பூமியிலே நடக்கவும் வெறுக்கிறோம்
 ஆண்டவனின் பாதத்திலே அடைக்கலமாய் போன தாயே
ஆதிசிவன் தேசத்திலே சோதியாய் கலந்த தாயே
 மூச்சிருக்கும் காலம்வரை நினைத்திருப்போம் நாமே
அமைதி கொள்வாய் அமைதி கொள்வாய் ஆண்டவனின் காலில்
 ஓம் சாந்தி!ஓம் சாந்தி ஓம் சாந்தி!

எம் தாயாரை இழந்து நாம் கலங்கி நின்றபோது ஓடோடி வந்து எம்துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறி ! அரவணைத்துக்கொண்ட என் பாசத்துக்குரிய உறவுகள், நண்பர்களுக்கும், நேரிலும் தொலைபேசி, முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் கண்ணீர் அஞ்சலிகளைப் பகிர்ந்து கொண்ட உறவுகளுக்கும் இறுதி நிகழ்வை சிறப்பாக செய்வதற்கு தோளோடு தோள்நின்று உதவிய நட்புகளுக்கும், இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் மண்டபத்துக்கு வந்து எமது அன்னைக்கு அஞ்சலி செலுத்தி வழி அனுப்பிவைக்கும் வரை உடனிருந்த சொந்தங்கள், உறவுகளுக்கும், அஞ்சலி உரைகளை நிகழ்த்தியவர்கள் தேவார பாராயணம் பாடி உதவியவர்களுக்கும். மலர் வளைவுகள் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை பிரசுரித்த அன்புள்ளங்களுக்கும். லங்காசிறி Tribute book மூலம் அஞ்சலியை தெரிவித்த அன்புள்ளங்களுக்கும், Lotus funeral and cremation Centre குழுவினருக்கும், கிரியைகள் செய்துதவிய ஐயா அவர்களுக்கும், நாம் செயலிழந்து நின்ற இன்றுவரை எமது இல்லத்துக்கு உணவு உபசாரத்தை அளித்து ஆற்றுப்படுத்திய அன்புள்ளங்களுக்கும். மற்றும் என் ஞாபகத்துக்குள் அடங்காத வேறு பல தருணங்களில் எமக்கு உதவியாகவிருந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக எம் அன்னையை வழி அனுப்பிவைக்க எம்மோடு உடனிருந்து எம் துயரில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் இருகரம் கூப்பி வணங்கி எம் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி! நன்றி! நன்றி!

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-06-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 04-06-2022 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் Baba Banquet Hall, 3300 McNicoll Ave, Scarborough எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்