

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் மார்க்கண்டு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் தாய் எங்கள் சாமி நீ!
பெற்றவளே பெரும்பொருளே
நீர் எம்மை விட்டும் பிரிந்து
வருடம் மூன்று ஆனதம்மா...
ஆயிரத்து நாறு விடியலும் கடந்து போனதம்மா
ஆனால் உனை இழந்து
நேற்றுப் போல உள்ளதம்மா
காலங்கள் கடக்கலாம் காட்சிகள் மாறலாம்
உன் நினைப்பு என்றும் மாறாதம்மா...
ஒற்றை ஆளாக நின்று எம்மையும் காத்தவளே
நீ கடந்து போன காலங்கள்
உனக்கு அதிக கஸ்டங்களை தந்தவையே
ஆனாலும் கடைசி வரை எம்மைக் காத்தவளே
அது காலத்துக்கும் தீர்க்க முடியாத கடனம்மா...
நீ விதைத்த வம்ச விதைகள் இன்று விருட்ச்சமாகி
அதிலிருந்து துளிர்கள் பிறக்கின்றன
அதைப் பார்க்கத்தான் நீ இல்லையம்மா,
வீட்டு முற்றத்தில் நீ நட்டு வைத்த
செடிகள் பூத்துக் குலுங்குதம்மா
அதில் உன் முகம் தான் தெரியுதம்மா...
காலச் சுழற்ச்சியில் இந்த இலைகளும்
ஒரு
நாள் உதிரும்
அதுவரை அம்மா உன் நினைவுகளை
எம்முயிர் சுமக்கும்...
ஓம் சாந்தி...