1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
வயது 83

அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
1938 -
2022
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
44
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி: 22-04-2023
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் மார்க்கண்டு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் சுமந்த தாயே!
எம் வாழ்வின் வலி சுமந்த நீ
ஓராண்டாக எம்முடன் இல்லை
ஆனாலும்
எம் வாழ்வின் வசந்தங்களிலெல்லாம்
வாழ்கிறாய் ....
கடலில் தோன்றும் அலைகள் யாவும்
கரையைச் சேர்வதைப்போல
உங்கள் எண்ண அலைகள் யாவும்
எங்களுடனேயே வாழ்கின்றன...
வாழ்ந்த வாழ்க்கையில்
உயிரோடு ஒட்டிய உறவே,
தஞ்சை கோயில் உள்ளவரை
சோழனுக்கு மரணமில்லை...
ஈழம் என்ற சொல்லிருக்கும்
வரை தலைவனுக்கும் மரணமில்லை...
உங்களால் கட்டமைக்கப்பட்ட
எங்கள் வரலாறு இருக்கும் வரை
உங்களுக்கும் மரணமில்லை...
மரணத்தைவிட தொன்மையான
கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்