யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 05-01-2026
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும் பிரியாத தெய்வம் நீ
உயிரின் ஓசையாக
உள்ளத்தின் மூச்சாக
ஒவ்வொரு நிமிடமும்
என்னோடு வாழ்ந்தாய் நீ
இன்று ஒன்பது ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உன்னோடு என் உறவு
ஒருபோதும் முடிவதில்லை
என் வாழ்க்கையின்
எல்லா பாதையிலும்
நீயே…
ஒன்பது ஆண்டுகள் ஓடிக் கரைந்ததம்மா
உங்கள் அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
என்றும் கரைவதில்லை
அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம் நீங்கள் அம்மா
இன்றோ அழுது தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா
ஆறுதல் கூறி அரவணைக்க எங்கள் அருகில் நீங்கள்
இல்லையம்மா
கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மை
கண்கண்ட தெய்வமாய் காத்தவர் நீங்கள் அம்மா
உங்கள் கனவுகளை நனவாக்கி காத்திருக்கின்றோம்,
எங்களை காண வருவது எப்போது...
என்றும் உங்கள் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்