யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலத்தின் கொடுமை தானோ
உன்னை காலனவன் கவர்ந்தது
நீ வருவாய் என்று நாங்கள்
காத்திருந்த கணங்கள் இன்று
ஆண்டுகள் இரண்டாகியது
என் நிலவுதனை தொலைத்துவிட்டு
நித்தமும் நான் கலங்குகின்றேன்
கலங்கி நிற்கும் எம்மையெல்லாம்
காத்து நிற்க வாராயோ!
அம்மா நீங்கள்
அருகில் இருந்து எம்மை
ஆளாக்கும் நேரத்தில் உங்களை
கயவனவன் கவர்ந்தானே எங்கள்
கனவுகளைக் கலைத்தானே!
தேவதை அம்மாவைத்
தொலைத்து விட்டுத் துடிக்கின்றோம்
என்னபிழை நாம் செய்தோம்
இது தெய்வத்தின் தண்டனையா?
அம்மா!
நிமிடமும் பிரியாமல்
எம்முடன் இருந்தீர்கள் இப்போ
நிரந்தரமாய் பிரிந்து போனால்
எப்படி நாம் தாங்குவோம்?
அருகிலிருந்து ஆறுதல் தர
இன்று இங்கு- நீங்கள் இல்லை
எங்களுக்குத் தேறுதலாய்
இறைவனோடு சேர்ந்து தெய்வமாய்த் துணையிருக்க
தினம் தினம் வேண்டுகின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தி பெற இறைவனிடம் பிரார்த்திக்கும்
கணவர், பிள்ளைகள், குடும்பத்தினர்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!