Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 APR 1967
இறப்பு 16 DEC 2016
அமரர் சிவநேசன் பத்மரூபி
முன்னாள் ஆசிரியை- Jaffna HolyFamily Convent, Vavuniya Rambaikulam Girls' Maha Vidyalayam, Negombo Wijeyaratnam Hindu Central College
வயது 49
அமரர் சிவநேசன் பத்மரூபி 1967 - 2016 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21.12.2021

ஆறாத்துயரில் ஆழ்த்தி -நீங்கள்
மீளாத்துயில் கொண்டு இன்று
ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா.
தேடிக்கிடைக்காத தென்றல் உங்களைத்
தொலைத்து விட்டுத் தவிக்கின்றோம்.
தேவதையாய் எங்களைத்
தேடிவரும் காலம் எப்போ?
நீங்கள் இல்லாத நிமிடங்கள் - இன்று
நாட்களாய் நீண்டதம்மா.....

என் தேவதையை நான் தொலைத்து
ஆனது இப்போ ஆண்டுகள் ஐந்து 
காலனை வைவதா
இல்லை என் காலத்தை வைவதா?
நீ எப்போதும் எங்களோடு
வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் என்ற நம்பிக்கையில்
என்றும் உன் நினைவுகளோடு நாங்கள்......
ஓம் சாந்தி  

தகவல்: குடும்பத்தினர்

Photos