திதி : 01-05-2023
யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அப்பாவின்
ஆரம்பகால நினைவுகள்.....
சுட்டெரிக்கும் வெயில்!
நம்பிக்கையூட்டாத மழை!
கைகொடுக்காத உறவு!
பரிச்சயம் கொள்ளாத சூழல்!
ஆயினும்....
பயிர்தான் என் உயிர்!
என உறுதிகொண்டாய்!
ஆனால்.. பயிரோ....?
உன் துடிப்பைக் கண்டு
கண் கலங்கியது!
உன் வியர்வை கண்டு மனம் இரங்கியது!
உன் உறுதியால் செவி சாய்த்தது!
உன் நேர்வழிக்குத்
தலைவணங்கியது!
சரிவுகளை எல்லாம்- உன்
சரீரத்தால் சரிப்படுத்திய- எங்கள்
சரித்திரத் தலைவனே...
எங்கள் மங்காத வாழ்வில்
பொங்கி நின்ற பிரகாசியே...
நீங்கள் எங்கள் வரம்!
நீங்களே எங்கள் தவம்!
நீங்கள்தான் எங்கள் கண்களுக்குள்
தெரியும் இராஜகோபுரம்!
உங்கள் ஆத்மா எங்கள் குலதெய்வம் கண்ணகையம்மன்
திருவடியில் இளைப்பாற வேண்டுகின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்