யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-05-2022
கடும் உழைப்பாலும்
விடா முயற்சியாலும்
பிறந்தவீட்டின் விடிவெள்ளியானவரே!
நீதி-நேர்மை-நாணயமென
நேர்கொண்ட பார்வையாலும்
வஞ்சகமறியாப் பாசமனத்தாலும்
சொந்தங்களையும் பந்தங்களையும்
வெற்றிகொண்டவரே!
வெறுங்கையோடு வேற்றூர் வந்தும்
தளராத உறுதியோடும் தன்னம்பிக்கையோடும்
வெற்றிவாகை சூடியவரே!
உங்கள் பாதம் தொழுகின்றோம்.
தந்தையே!
எங்கள் தவமே!
உங்கள் தெய்வமனம்
இறைவன் அளித்த வரம்- அது
எமக்கே கிடைத்த பேறு!
எத்தனையாண்டுகளானாலும்
உங்கள் நினைவுகள்- எங்கள்
மனக்கோயிலில் கோபுரமாய்
உயர்ந்தே நிற்கும்!
உங்கள் ஆத்மா நற்பேறு அடைய
எங்கள் குலதெய்வம் பூம்புகார் பூமாவடி
கண்ணகை அம்மனை இறைஞ்சுகின்றோம்.
உங்கள் நினைவுகள் சுமந்து வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details