8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்
யாழ்- மண்டைதீவு பூம்புகார் பூமாவடி கண்ணகையம்மன் ஆலய மரபுவழி பஞ்ச தர்மகர்த்தா
வயது 74
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
முயற்சியே வாழ்வின் தலையாய்
புன்சிரிப்போ பூத்த சோலையாய்
பாசத்துடிப்போ ! பொங்கும் அலையாய்
நிமிர்ந்த நடையோ! உயர்ந்த மலையாய்
கபடமற்ற பேச்சோ! நாணயத்தின் விலையாய்
நேர்கொண்ட பார்வையோ ! அறத்தின் சாலையாய்
நாம் போற்றித் துதிக்கும் எம் தந்தையே!
உம் திருவடி பணிந்து தொழுகிறோம்!!
எட்டாண்டுகள் எட்டு தசாப்தமாய் கடந்தாலும்
உங்கள் சகாப்தமே
பயிலும் தத்துவ நூலாய்
பதிந்த எழுத்தோலையாய்
இதயத்தில் வடித்த சிலையாய்
என்றும் மனதில் நிலையாய்
உங்கள் ஆத்மா நற்பேறைடைய மண்டைதீவு கண்ணகையம்மனை இறைஞ்சுகின்றோம்.
என்றும் உங்கள் நினைவுகளோடு
மனைவி
பிள்ளைகள்
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்..
தகவல்:
குடும்பத்தினர்