12ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்
யாழ்- மண்டைதீவு பூம்புகார் பூமாவடி கண்ணகையம்மன் ஆலய மரபுவழி பஞ்ச தர்மகர்த்தா
வயது 74
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த உயர்திரு சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
தனியொருவனாய்
தன்னை உருக்கி
வெறும் கைகளை
வெற்றிக் கைகளாக்கி
தான் என்று வாழாது
தன்னலங்கருதாது
தன்னையே அர்ப்பணித்த
எங்கள் தந்தையே
உங்கள் திருவடி பணிகின்றோம்!
பன்னிரு ஆண்டுகளே..ஆனாலும் கபடமற்ற உங்கள் சிரிப்பும் நியாயமான உங்கள் கோபமும் வஞ்சகமற்ற உங்கள் பேச்சும் கண்ணுக்குள் நிற்கின்றதே- அப்பா உங்கள் நினைவுகளோடு வாழ்கின்றோம்! உங்களின் ஆத்மா மண்டைதீவு பூம்புகார்பூமாவடிஅம்பாள் திருவடி நிழலில் நற்பேறு அடைய வேண்டிநிற்கின்றோம்!
உங்கள் நினைவுகள் சுமந்து நிற்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்