11ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்
யாழ்- மண்டைதீவு பூம்புகார் பூமாவடி கண்ணகையம்மன் ஆலய மரபுவழி பஞ்ச தர்மகர்த்தா
வயது 74
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த உயர்திரு சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 18-04-2024
உறவை உளமார நேசித்து
தான் விழுந்தாலும்
தன் உறவு விழுந்திடக்கூடாது
என்ற தன்னலமற்ற சிந்தனையை
தன்னுள் நிரப்பி
தனித்துவமாய் உயர்ந்து நிற்கும்
எங்கள் தந்தையே....
“உடன்பிறப்பு” என்ற சொல்லின்
அர்த்தத்தை தன் அகத்தில்
அழகு பார்த்து அனுபவித்த
மாசற்ற சோதியே...!
அரும் பெருஞ்சோதிபோல்
நாம் தவமாய் பெற்ற வரமே..!
என்றும் எங்கள் மனதில் நிற்கும்
அணையாத ஒளிவிளக்கே..!
உங்கள் நினைவுகளால் வாழ்கிறோம்..!
உங்கள் திருவடி தொழுகின்றோம்.
உங்கள் ஆத்மா, எங்கள் குலதெய்வம்
கண்ணகை அம்மன் திருவடியில் இளைப்பாற
இறைஞ்சுகின்றோம்.
உங்கள் நினைவுகளை சுமந்து வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்