வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.
17 ஆண்டுகள்… அப்பா உங்களைத் தேடி...
பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன அப்பா…
ஆனா நீங்கள் வராத அந்த ஒவ்வொரு நாளும்
எங்கள் மனசு இன்னும்
உங்கள்
சத்தத்தைக் தேடிக்கொண்டே இருக்கிறது.
சின்ன வயசில் பிடிச்ச கை
வாழ்க்கையிலும்
இன்னும்
உங்களைத் தான் நாடுது;
உங்கள் தோள்மேல் அழுத அந்த நிமிடம்
இன்னும் இரவில் கனவாய் வந்து போகுது.
வீடு எங்கும் இருந்த உங்களது சிரிப்பு
இப்போ நினைவுகளின் சுவடாக மட்டுமே;
ஆனா அந்த ஒரு சுவடு தான் எங்கள்
வாழ்வை இன்றைக்கும் தாங்கிப்பிடிக்கும் கயிறு.
உங்கள் நினைவால் பரிதவிக்கிறேன்
என் பலத்தில் ஒரு பாதி
நீங்கள் என எண்ணியிருந்தேன்
இன்று மறுபாதி என்னிடமில்லையே
எங்குசென்றீர்கள்
எம்மையெல்லாம் விட்டுவிட்டு
நீங்கள் என்றென்றும்
எங்கள் காவல் தெய்வம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
உங்கள் அன்புக்காக ஏங்கும்:
மனைவி- பிறேமலதா
பிள்ளைகள்- ஜனார்த்தனன்(Aeronautical Engineer), சுபர்னா(Doctor), தனுஷா(Lawyer)
Vous nous manquez beaucoup ? VARTHIANATHAR arulnathan famille