வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பதினொன்று ஓடி மறைந்தனவே..
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உங்கள் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் அப்பா...
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
ஆண்டுகள் பதினொன்று சென்றாலும்
உன்பிரிவை ஏற்கவில்லை எங்கள் மனம்!
உன் சிரிப்பொலி இன்னும் உறைந்து
நிற்கின்றது எம்மனதில் அழியாத ஓவியமாய்!!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் மனைவி பிரேமலதா, பிள்ளைகள் ஜனார்த்தனன், சுபர்னா, தனுஷா
Vous nous manquez beaucoup 😭 VARTHIANATHAR arulnathan famille