வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே
எங்கள் ஆருயிர் அப்பாவே
அன்போடும் பண்போடும்
அயாரமல் காத்தவரே
ஈர் எட்டு ஆண்டுகள் கடந்தாலும்
ஆறாது என்றும் உங்கள் நினைவுகள்
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றீர்கள் அப்பா
திரும்பி வர முடியா தூரம் நீங்கள் சென்றாலும்
ஒவ்வொரு நொடியும் எங்கள் உள்ளங்களில்
நீங்கா நினைவாக வாழ்கின்றீர்கள் .
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
அப்பா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
எல்லாம் இருந்தென்ன எம்மோடு
நீயின்றி இதயம் கனக்கிறது
எழுதிய விதி எண்ணி நேற்றுபோல்
எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உமைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த நினைவுகள்
ஒருபோதும் அகலாது, வலிகள் சுமந்து
விழிகள் நனைந்து வாழும் நாள் முழுக்க
உமை நினைந்து வாழும்
உங்கள் பிரிவால் வாடும் மனைவி பிறேமலதா,
பிள்ளைகள் ஜனார்த்தனன், சுபர்னா, தனுஷா