வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்பத்தின் முத்தே அப்பா
எம் இதயத்து திருவிளக்கே
முத்து சறுக்கியதோ மகுடமுடி சாய்ந்ததுவோ
எம் இதயம் உங்கள் நினைப்பில்
எண்ணெய் இல்லா திரி ஆச்சே
ஆண்டுகள் பத்து ஆனாலும்
ஆறாது எம் இதயம்
எங்கள் ஆருயிர் அப்பாவே
எம் வாழ்வின் தென்றலே
பண்பின் உறைவிடமே
பாசத்தின் குலவிளக்கே
கனிவான உங்கள் பேச்சும்
பண்பான உங்கள் செயலும்
மறக்குமோ எங்கள் நெஞ்சைவிட்டு
பத்து ஆண்டுகள் ஆனாலும்
எங்கள் நெஞ்சங்களில் நீங்காமல்
என்றும் நிறைந்திருப்பீர்கள் அப்பா
உண்மையை பேசுங்கள்
உழைத்து வாழுங்கள்
அடுத்தவரின் உழைப்பினிலே
வாழ்வதற்கு நினைக்காதீர்கள்
நெஞ்சிலே நஞ்சு வைத்து
நாவிலே தேன் தடவி
வஞ்சக சிரிப்பு காட்டுவோரிடம்
சிக்கிவிடாதீர்கள் என எல்லோருக்கும்
அறிவுரை சொல்வீர்களே
விதி என்னும் இரண்டெழுத்து
எங்கள் வாழ்வில் வந்து - உங்களை
எங்களிடமிருந்து பிரித்துவிட்டதே
நீங்கள் எங்களை விட்டு
பிரிந்தபோதுதான் தெரிந்தது
கண்ணீர்துளிகளின் விலையென்னவென்று
என் வாழ்வின் இனியவரே
என் இதய உறவே
உங்களின் பிரிவு என்பது
எங்களால் மறுக்கமுடியாத வலி
உங்கள் நினைவு என்பது
யாராலும் திருடமுடியாத பொக்கிஷம்
சோகம் தனிமையில் கூட வரும் ஆனால்
உண்மையான சந்தோஷம்
அன்பானவர்கள் இருக்கும்போது மட்டுமே வரும்
எனது வாழ்வில் ஒரு உதயம் பிறந்தது
அந்த உதயம் மறைந்து பத்து வருடமாகியதே
பாசம் காட்டிட இதயத்தின்
பக்கத்தில் அமர்ந்த அப்பாவே
நெஞ்சில் நம்பிக்கை எனும்
விதையை விதைத்த
முதல் கடவுள் அப்பாதான்
கண்ணில் கண்ணீர் வந்தாலும்
உங்கள் முகம் மறையவில்லை
அம்மா எங்களை தன் கருவில் சுமந்தாள்
அப்பா நீங்கள் தோளில் சுமந்தீர்கள்
மனமெல்லாம் உங்கள் நினைவு
நினைவெல்லாம் பால் போன்ற நின் வதனம்
எண்ணி எண்ணி வாடுகின்றோம்
இந்த பத்தாம் ஆண்டு நினைவு நாளில்
ஆருயிர் அப்பாவிற்கு
கண்ணீர்ப் பூக்கள் தூவுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தி பெற
கடவுளை வேண்டுகின்றோம்
என்றும் உங்கள் நினைவாக வாழும்
பிறேமலதா(மனைவி), ஜனார்த்தனன்(மகன்),
சுபர்னா(மகள்), தனுஷா(மகள்).