13ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறித்து பதிமூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்- உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க- ஏன்
விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்...
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..
உங்கள் பிரிவால் வாடும் மனைவி பிறேமலதா,
பிள்ளைகள் ஜனார்த்தனன், சுபர்னா, தனுஷா
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
Vous nous manquez beaucoup ? VARTHIANATHAR arulnathan famille