ஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரசிக்குமார் ரதுஷன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாட்கள் அழிந்தன, வாரங்கள் அழிந்தன,
மாதங்கள் அழிந்து வருடங்களை பிடிக்க
வேகம் எடுத்தாலும் நாமோ அவ்விடத்தில்
தான் நிற்கின்றோம் நீ
எம்மை விட்டுச் சென்ற இடத்தில்
எம் விழிகள் வெளிப்படையாக
அழுத போதே புரியாத(விதியே)
உனக்கு எம் இதயங்கள் சிந்துகின்ற
குருதியா தெரியப் போகிறது
தூரத்தில் நின்று தொடுவானில் புன்னகைக்கின்றாய்
நாமோ கரம் நீட்டி கண் திறந்து கனவென
இருள் சூழ நிற்கின்றோம்
வார்த்தைகளின் வடிவில்
பக்கம் வந்து போகின்றாய்
புன்னகைத்து பூக்களாய் தூவுகின்றாய்
அத்தனையும் கானல் என கண்முன்னே கரைந்ததையா
உன் உருவம் மறையாது
உன் நினைவுகள் மறையாது மகனே!
எப்படிச் சொல்வது
பிரிவால் வாடி தவிக்கும் அப்பா, அம்மா, தம்பி
அன்பின் ரதுஷனே நீ எம்மை விட்டு சென்று ஆண்டுகள் நான்குஆனதோ நம்பமுடியவில்லை.உன் நினைவுகள் என்றும் எம் இதயங்களில்.... -உன் அன்பான உறவுகள்- ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.🙏🌷🙏