ஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரசிக்குமார் ரதுஷன் 1ம் நினைவஞ்சலி.
ஆறாத்துயருடன் ஓராண்டு நினைவலைகள்
ஆண்டொன்று சென்றாலும் உன் பிரிவால்
ஆறாத துயரத்தில் அழுது புலம்புகின்ற- உன்
அப்பா அம்மாவின் துயர் தீர்க்க மீண்டும்
அகிலத்தில் பிறவாயோ ரதுஷனே!
தாங்காத துயரினால் உன் தம்பி
தனித்து நின்று துடித்திட வைத்தாயோ
ஜேர்மன் நாட்டிலா உனக்கும் பொல்லாத
எமன் வலை விரித்தான் விதிமுடிக்க
சித்தம் கலங்கி உன் சித்தப்பா துடிப்பதை
சொல்லிட வார்த்தைகள் உண்டோ?
மண்ணுலகை நீ விட்டுச்சென்ற நாள் முதலாய்
மாமா மாமியர் துடிப்பதை மன்னவனே நீ அறிவாயோ
புலம்பெயர்ந்து சென்றபோதும் உன்
புலன் எல்லாம் எம் மண்ணில் வைத்தவளே
ஊர்விட்டு வேற்றூர் சென்றாலும்- உன்
உறவுகளைத் தேடிவந்து பார்த்தவனே!
விருப்புடனே கல்வி கற்க சென்ற வேளை- உன்
விதியை முடித்தானே பொல்லாத காலனவன்
விழிநீர் சொரிந்து நாமும் விம்பி அழுகின்றோம்
விண்ணுலகு சென்றவனே விரைந்தோடி வாராயோ!
ஓடி மறைந்து நீ ஓராண்டு சென்றாலும்
ஒரு பொழுதும் உன்னை மறக்க முடியாது
உள்ளத்தால் உருகி அழுகின்றோம் ரதுஷனே
உன் திருமுகத்தை ஒரு முறையும் பார்க்க மட்டுமே
தலைமகனாய் வந்துதித்த செல்வமே தலை நிமிர்ந்து
நாங்கள் நிற்போமென எண்ணிய வேளை தலை சாய்ந்து
போன மாயம் தான் என்னவோ ரதுஷா! நீயில்லாத
வாழ்வு நித்தமும் எங்களை கொல்லுதடா மகனே..
அம்மா அப்பாவென தாழ்ந்த குரலில் ஒலிக்கும்
இனிய ஒலி எந்நேரமும் காதில் அலையாய்கிறதே
நிதம் நிதம் உன் சிரித்த வதனம் மீண்டும்
பார்க்க மாட்டோமா? என்று துடிக்குதடா பேதை உள்ளம்
ஒரேயோரு உன் தம்பி நீயில்லாது தனிமரமாக..
உன் அறையை வலம் வந்து நீ என்னுடன்
இறுக்கிறாய் என தவிக்கிறான் ரதுஷா!
யாரால் ஆறுதல் கூறமுடியும்...
எந்நாளும் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டமாக எங்கள் வீடு
இன்று நீ இல்லாது வாடிவதங்கி இருக்கின்றதே..
ஆண்டவனின் சோதனையா? புரியவில்லை அன்பு மகனே!
குசினியின் கதவோரம் எட்டிப்பார்த்து அம்மா என்று
அழைக்கும் கொஞ்சும் குரல் மீண்டும் மீண்டும்
கேட்காதாவென எட்டுத்திக்கும் தேடுகிறாளே அன்னை..
உன் கனவுகள், கற்பனைகள் ஒரு நிமிடத்தில்
காற்றோடு காற்றாய் கலந்து போனதே..
அப்பம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், சிற்றப்பாமார்
சித்திமார், மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார்,
உடன்பிறவாச் சகோதரங்கள், உற்றார்
உறவினர்களுடன் உரையாடிய அழகு தமிழ் எங்கே? ரதுஷா
எங்கள் வாழ்வில் சந்தோஷம் ஏது? செல்லமே..
பல நூற்றாண்டு ஆனாலும் எம் உள்ளங்களில்
என்றும் அழியாத உன் நினைவுகள்..
உந்தன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
09-01-2021 சனிக்கிழமை அன்று ஒன்றாம் ஆண்டு திவசம் இல்லத்தில் நடைபெறும்.
அன்பின் ரதுஷனே நீ எம்மை விட்டு சென்று ஆண்டுகள் நான்குஆனதோ நம்பமுடியவில்லை.உன் நினைவுகள் என்றும் எம் இதயங்களில்.... -உன் அன்பான உறவுகள்- ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.🙏🌷🙏