திதி: 26-12-2024
ஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரசிக்குமார் ரதுஷன் 5ம் நினைவஞ்சலி.
உன் நினைவுகள் என் சுவாசம்
ஐந்தாண்டுகள்
ஆனதையும் உன்னுடன் நான் பேசுகிறேன்,
என் நினைவுகள் வழியே
உன்னை தொட்டுக்கொள்கிறேன்,
உன் சிரிப்பு ஒவ்வொரு நாளும் ஒளியை தருகிறது,
உன் குரல் காற்றில் இன்னும் மீட்டப்படுகிறது.
நீ தொலைந்தாலும் என்னை விட்டில் இல்லை,
உன் சுவடு என் பாதையில் வாழ்கிறது.
வானத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும்
உன்னைப் போல் பிரகாசிக்கிறது,
அவை என் இரவை தாங்கும் தோழர்களாகிறது.
உன்னைக் காண முடியாதிருப்பது எனக்கு கொடூரம்,
ஆனால் உன் அன்பு என்னை தாங்குகிறது.
ஒருநாள், காற்றின் ஓசையிலோ, கனவின் நிழலிலோ,
நீ என்னை மீண்டும் அணைக்கும் என்று நம்புகிறேன்.
நீ ஓர் நினைவல்ல, நீ ஓர் உயிர்,
என் இதயத்தில் வாழும் ஒவ்வொரு
மூச்சில் நீ வாழுகிறாய் அண்ணா!
ஐந்து ஆண்டு ஆனதுவே மகனே!
தீராத துயரத்தில் நீயில்லாது ரதூஷா...
நித்தமும் உன் குரல் கேட்காதா என
தினம் தினம் அழுகின்றோம் மகனே...
உன் அப்பா, அம்மா, தம்பியை
தவிக்கவிட்டு கண்களை மூடி
விட்ட
மாயம் தான் என்னவோ!
உன்னை எண்ணி எண்ணி
தினம்
தினம் மனம் வெதும்புகின்றோம் மகனே!
நீ மறைந்த நாள் முதலாய் நிம்மதியிழந்து
நினைவிழந்து நிற்கதியாய் நிற்கின்றோம்
எங்கள் அன்பு மகனே!
உன் கபடமற்ற
சிரிப்பு கடவுளுக்கு பிடித்ததோ!
அதனால் தான்
உன்னை அழைத்து விட்டான்
ஐந்து ஆண்டுகள் என்ன நாம் இந்த
மண்ணில்
வாழும் வரை உனது
நினைவுகளுடன் வாழ்வோம்.
இன்னும் ஓர் நப்பாசை
திரும்பி
எங்களிடம் வரமாட்டாயா மகனே ரதுஷா...
உனது நினைவுகளுடன்
என்றும் உனது அப்பா, அம்மா, தம்பி
அன்பின் ரதுஷனே நீ எம்மை விட்டு சென்று ஆண்டுகள் நான்குஆனதோ நம்பமுடியவில்லை.உன் நினைவுகள் என்றும் எம் இதயங்களில்.... -உன் அன்பான உறவுகள்- ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.🙏🌷🙏