திதி:13/01/2026
ஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரசிக்குமார் ரதுஷன் 6ம் நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
வளர்ந்து வந்த வழி மாறி
நீ எங்கே சென்றாயடா!
விதி விளையாட கூட்டி சென்றதோ!
பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம் !
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
மீண்டும் உன் முகம் ஒரு முறை தோன்றாதடா?
மறுபடியும் உன் முகத்தை பார்த்திடுவோமா?
எம்மால் ஆறமுடியவில்லையடா
உன் அப்பா, அம்மா, தம்பியை
தவிக்கவிட்டு
கண்களை மூடி விட்ட
மாயம் தான் என்னவோ!
உன்னை எண்ணி எண்ணி
தினம் தினம்
மனம் வெதும்புகின்றோம் மகனே!
நீ மறைந்த நாள் முதலாய் நிம்மதியிழந்து
நினைவிழந்து நிற்கதியாய்
நிற்கின்றோம்
எங்கள் அன்பு மகனே!
இன்னும் ஓர் நப்பாசை
திரும்பி
எங்களிடம் வரமாட்டாயா மகனே ரதுஷா..!
உனது நினைவுகளுடன்
என்றும் உனது அப்பா, அம்மா, தம்பி
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!