ஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரசிக்குமார் ரதுஷன் 3ம் நினைவஞ்சலி.
திதி: 19-12-2022
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!
நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய்
இவ்வுலகை விட்டு....?
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை
எது என்று தெரியாது....?
என் அருமை மகனே!
என்னைவிட்டு எங்கு சென்றாயோ
என்னை விட்டுப்பிரிய உனக்கு
என்னவென்று மனம் வந்தது...
என் தங்கமே என் கடைசிச் சொத்தே
எ
ன் கடன் தீர்ப்பாயென காத்திருந்தேன்!
கடைசியில் உன் கடமை பார்ப்பதற்கா
என்னை விட்டு வைத்தாய்
என் நெஞ்சே வெடிக்குதடா!
வேரிழந்த மரமாய்
காடிழந்த விலங்காய்
நீரில்லா மீனாய்
நெருப்பில் விழுந்த புழுவாய்
நாம் இங்கு துடிக்கிறோம் கண்ணா!
காலமும் கடந்து ஆண்டு மூன்று ஆனது
ஆனாலும் உன் கால் தடங்கள் மாறவில்லை
மறக்க முடியுமா கண்ணா உன்னை- இந்த
மானிட வாழ்வில் தான்
வலிகொண்டு துடிக்கும்
எம் இதயத்தை
தென்றலாய் தேற்ற ஓடிவா
தேவையான அமைதியை
வீதியிலே தேடுகிறோம்
தேடியும் கிடைக்கவில்லை
ஓடியே
வந்திடுவாய் மறுபடியும் இங்கே...
கண்முன்னே வாழ்ந்த காலம்
கானல் நீராகிப் போனதோ
எண்ணிய எண்ணங்கள்
கனவாகிப் போனதோ சுற்றத்தாருடன் கூடி
உறவாடிய நாட்களும் கலைந்து போனதோ
நெஞ்சோடு நீங்காத உன் நினைவுகளுள்
கண்ணோரம் சிந்தும் கண்ணீருடன்
உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உன் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீ
விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பாய்.
வார்த்தை தடுமாறுகின்றதே
நேற்றுக் கண்ட உனை நினைத்து
நெஞ்சம் உருமாறுகின்றதே!!
காந்தமாய் எமையீர்த்த உனை
காலனுனை கவர்ந்து சென்றதேனோ?
காலமெல்லாம் உம் உறவு
நினைத்துருக
காததூரம் எமைவிட்டு
சென்றதேனோ? – நாமோ!!
இன்று
மங்காத உன் நினைவால்
மயங்கியே நிற்கின்றோம்.
அன்பின் றதுஷனே ஆண்டு பல சென்றாலும்
என்றென்றும் உன் நினைவு
எம் இதயத்தில் நிலைத்திருக்கும்.
உன் பிரிவால் துயருறும்
மாமிமார்கள்,
மாமாமார்கள், மைத்துனர்கள், மைத்துனிகள், சித்தப்பா,
பெரியப்பா, பெரியம்மா...
வீட்டு முகவரி:
Christophstraße, 278532,
Tuttlingen, Germany.
அன்பின் ரதுஷனே நீ எம்மை விட்டு சென்று ஆண்டுகள் நான்குஆனதோ நம்பமுடியவில்லை.உன் நினைவுகள் என்றும் எம் இதயங்களில்.... -உன் அன்பான உறவுகள்- ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.🙏🌷🙏