ஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரசிக்குமார் ரதுஷன் 4ம் நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன்னே
நான்காமாண்டு வந்தந்துவே!
வாழ்ந்த கதை முடியுமுன்னே
நீ வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா!
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்...
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!
பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம்!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்!
உன் பிரிவால் வாடும்
அப்பா, அம்மா, தம்பி
அன்னாரின் திதி 07-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அன்பின் ரதுஷனே நீ எம்மை விட்டு சென்று ஆண்டுகள் நான்குஆனதோ நம்பமுடியவில்லை.உன் நினைவுகள் என்றும் எம் இதயங்களில்.... -உன் அன்பான உறவுகள்- ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.🙏🌷🙏