யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கனகம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 08/09/2024.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் ஆறு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உங்கள் பிம்பம் காணவில்லை அம்மா!
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம் அம்மா!
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காணவில்லை அம்மா!
மனதோடு எமை சுமந்து பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
ஆறாது உங்களின் இழப்பின் துயர் நெஞ்சை விட்டு நீங்காது...
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.