யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கனகம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-08-2023
ஐந்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!
சிந்தையிலே உன் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது!
விழியோரம் கசியும் கண்ணீர்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும் அம்மா
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களைப் போல் இணை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தீர்கள்
இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்