யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கனகம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி- 11-09-2021
மூன்று ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா என்றே
மனம் தேடுகின்றதம்மா
வற்றாத கடல்நீர் வற்றினாலும்
வரம் தந்த எங்கள் தெய்வத்தின்
அன்பு என்றுமே வற்றாதே
எம்மை பிரிந்து போன எம் அம்மாவே நிதம்
விழியில் விரியும் உங்கள் நினைவில்
இதயம் எரிந்து வேகுகின்றோம்- கண்
இமைகள் சுட நீர் சிந்துகின்றோம்!!
கருவாய் சுமந்து உருவாய் வளர்ந்து- எம்மை
உயர்த்தி வளர்த்த எங்கள் தாயே- இனி
உங்கள் நினைவை சுமந்து காலம் முழுதும்
நீங்கள் காட்டிய நல்வழி தொடர்ந்திடுவோம்!
மூன்று ஆண்டுகள் ஓடிவிடலாம் இனிவரும்
காலங்களும் மறைந்து விடலாம் நீ மட்டும்
எங்கள் வாழ்வில் நீ வாழ்ந்த வாழ்வில்
நீ வசித்த இல்லத்தில் உங்கள் நினைவில்
வாழ்கின்றோம் மனக்கணத்தோடு!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள்,
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details