நன்றி நவிலல்
அன்னை மடியில் 06 JAN 1959
இறைவன் அடியில் 25 OCT 2021
திரு இராசையா குணரட்ணராஜா (சின்ராஸ், குணா மாஸ்ரர்)
வயது 62
திரு இராசையா குணரட்ணராஜா 1959 - 2021 யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ் கரவெட்டி கிழக்கு, சோலைப்பிட்டியை பிறப்பிடமாகவும், London Barkingside ஐ வதிவிடமாகவும், கொண்டிருந்த அமரர் இராசையா குணரட்ணராஜா அவர்களின் நன்றி நவிலலும், அந்தியேட்டி அழைப்பும்.

எங்கள் அன்புக்கு உரியவரின் திடீர் மரணச் செய்திகேட்டு நாம் எல்லோரும் மிகுந்த துயரில் இருந்த வேளையில், நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல்,மின்னஞ்சல், மலர் வளையங்கள் அனுப்பியும் மற்றும் RIB Book மூலமாகவும்,எங்களுக்கு ஆறுதலும் தேறுதலும் தந்து ஆறாத துயிரில் பங்கு கொண்டு அனுதாபம் கூறிய, உறவினர்கள், நண்பர்கள், மற்றும் மாணவர்கள், மற்றும் இன்றுவரை எமது தேவைகருதி சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், எங்கள் குடும்பத்திரர் சார்பாக கண்ணீரோடு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அருமை உறவின் அந்தியேட்டி நிகழ்வு 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பின்வரும் விலாசத்தில் மு.ப 10:00 தொடக்கம், பி.ப 2:00 மணிவரை, ஒழுங்கு செய்யப்பட்டு இருப்பதால், அன்னாரின் பிரிவில் கலந்து கொண்டு, ஆறுதல் தந்த உங்கள் அனைவரையும், குடும்பத்தாருடன் இணைந்து, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதோடு, மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு குடும்பத்தினரின் சார்பில் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மதியபோசனம் நடைபெறும் இடம்:

Mayfair Venue
1078-1082 High Road
Romford
RM6 4BD

Live Steaming Link: Click Here

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 70 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.