2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் தெற்கு, பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா கனகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு போனாலும்
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
உன் உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை உருக்கி
எமைக் காத்தாய்
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து
உமை நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே
எத்தனை ஆண்டுகள் மாறினாலும்
உம் நினைவு எம்முள்
அகலாது ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சத்தியலிங்கம்(சகோதரர்)
Rest in peace