
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Parasakthi Vasanthan
1965 -
2020

பராவிற்கோர் அஞ்சலி இயற்கை மடியில்..... (நிரையொன்றாசிரியப்பா) ++++++++++++++++++++++++ தங்கை பராசக்தி தனியே இயற்கையில் கங்கை கண்ணிறைக்க கனிவாய்க் கலந்தார் சிட்டெனப் பறந்த செய்தி செவிவிழ விட்டெமைப் பிரிந்தும் விடுமோ நினைவுகள் ! அன்று அம்மா அப்பா அரவணைப்பில் சென்னை நகரில் சிறியனின் தங்கையாய் கண்டநற் காட்சி கண்ணில் நிற்கிறதே ! அண்டம் கலந்தபோதும் ஆட்சி நிகழ்கிறதே ! சிட்னி வந்தவேளை சிறப்பாய் விருந்தோம்பல் சட்டென மறப்பேனோ சாவே பிரித்தாலும் பின்பொருநாள் சென்னை பிள்ளைகள் சூழ இன்னும் என்ன இணையத்தில் வாழ்த்துகள் இப்படி இருப்பினும் எப்படி நம்புவேன் எப்போதும் மீளா இருப்பிடம் சென்றதை ? இயற்கை மடியில் இளைப்பாறு மகளே ! இயங்கும் அன்பில் இனிதுயில் வாயே ! - ராம் (06-04-2020)

Write Tribute
அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள்...