
பிள்ளை, 5 வருடங்கள் கடந்துவிட்டன, உனது இழப்பு மிகவும் வலி நிறைந்ததாக இருப்பதாகவே உணர்கிறேன். இன்றும் கூட எல்லா முக்கிய முடிவெடுப்புகளிலும் உனது ஆலோசனை இல்லாது இருப்பது பெரும் இழப்பாகவே உணர்கிறேன். நீ என் வாழ்க்கையில் கொண்டு வந்த மகிழ்ச்சியை நானும் எனது குடும்பமும் ஒருபோதும் மறக்கவில்லை. இன்று காலையிலும் வைத்தி அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை என்பதைக் கண்டேன். காலத்திற்கு முந்திய உனது இழப்பால் எமது தாயார் மிகவும் தளர்ந்து போயிருந்தார். தனது இறுதிச் சடங்குக்காக உன்னை நிறையவே எதிர்பார்த்திருந்தார். நீ இருந்திருந்தால் என்ன செய்திருப்பாயோ அதே அளவு பொறுப்பாகவும் சிறப்பாகவும் உனது கணவனும் பிள்ளைகளும் அம்மாவை வழியனுப்பி வைத்தார்கள். பிள்ளை, நீ எங்களை விட்டுப்பிரிய நேர்ந்தபோது உலகம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. 30 மில்லியன் மக்கள் தங்கள் உறவுகள் பக்கத்தில் இல்லாமலேயே உயிர்விட தள்ளப்பட்டார்கள். இன்றைய உலகம் அதையும் விட காட்டுமிராண்டித் தனமாகி விட்டது. நீ இறுதியாக வாழ்ந்த ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பா உட்பட ஒவ்வொரு வளர்ச்சியடைந்த நாடுகளிலும் நூறாயிரக் கணக்கான பொதுச்சேவை துறை தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருவதுடன், சமூகநல வேலைத்திட்டங்களை திட்டமிட்டு அகற்றி வருகின்றனர். சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, ஓய்வூதியம், வேலையற்றோர் பாதுகாப்பு, அனைவருக்குமான கல்வி போன்ற மனித குலத்தின் மிகவும் அடிப்படை அம்சங்களை அழித்து உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போருக்கும், பாலஸ்தீனத்தில் இன அழிப்புக்கும் நிதியிடுகின்றனர். கல்வியறிவற்றவர்களாக்கி ஒரு இளம் தலைமுறையை போருக்கு தயார்செய்கின்றனர். ஹிட்லரை பற்றி நாம் முன்னர் புத்தகத்தில் படித்தவற்றின் ஆரம்ப கட்டங்களை இன்று அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நாம் காணத்தொடங்கியுள்ளோம். இவற்றைப் பற்றியெல்லாம் நாம் நிறையவே கதைத்திருக்கிறோம். அதனால்தான் உன் நினைவு என் இதயத்திலும் உன்னை அறிந்தவர்களின் இதயங்களிலும் என்றென்றும் உயிர்வாழ்கிறது. அது சாத்தியமில்லை என்று தெரிந்தாலும், இன்னொரு முறை உன்னைப் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என மனம் எண்ணுகிறது! அண்ணா
அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள்...