
யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி வசந்தன் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா(தங்கராசா), திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தன் அவர்களின் அன்புத் துணைவியும்,
ஜனனி, நயனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானலிங்கம், குணலிங்கம், காலஞ்சென்ற இந்திரலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விவேகானந்தன், வசந்தி, ஜெயந்தி, வதனி, ராதிகா, சியாமினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தியாகராசா, நாகம்மா தம்பதிகளின் அன்பு பெறா மகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு(சங்கீத ஆசிரியர்), வீரலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போது உலகளாவில் நிகழும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசாங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு குறித்த ஒரு சிலர் மட்டுமே இறுதி கிரியையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னாரின் இறுதிக்கிரியையின் பதிவு செய்யப்பட்ட காணொளி பின்பு இவ் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும்.
அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள்...