
பிள்ளை, நீ சிந்திப்பதை நிறுத்தி ஒருவருடமாகிறது, நாம் உன்னைப் பற்றி சிந்திக்காத நாள் இல்லையெனலாம். எமது குழந்தைப் பருவ வாழ்க்கை, இளம்பிராய வாழ்க்கை, பக்குவமடைந்த கால வாழ்க்கை என பல வேறுபட்ட கால அனுபவங்களை எமது கட்டுப்பாட்டையும் மீறி மூளை நாளாந்தம் ஒருமுறையாவது அசைபோடுவதை நிறுத்தியது கிடையாது. நீ எங்களுக்கு ஒரே குட்டி சகோதரியாய் மட்டுமல்ல, மனம்விட்டு பேச தகுதிகொண்ட நல்ல நண்பியாக, எமது நல்வாழ்க்கையில் அக்கறைகொண்ட ஒரு தாயாக இருந்தாய். தொலைபேசி ஒலித்ததும், சொல்லு அண்ணா என்பாய்! எப்படியாயினும் அந்த கலந்துரையாடல் முடிவுக்குவர ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் செல்லும். நாம் எமது குடும்ப நிலைமைகளைப் பற்றிப் பேசுவோம். எமது மூதாதையர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட நல்ல பண்புகளைப் பற்றி பேசுவோம். ஐரோப்பிய, ஆஸ்திரேலிய அனுபவங்களைப் பற்றிப் பேசுவோம். கிராமத்தில் பிறந்த நாம், எமது வாழ்க்கையில் செய்யவேண்டிய மாற்றங்களைப் பற்றிப் பேசுவோம். மேற்கத்தைய இசை பற்றிப் பேசுவோம். எப்படியாயினும் ஒரு முறை மதங்கள், கடவுள் பற்றி பேசுவோம், அங்கே நாம் உடன்பட மாட்டோம். இறுதியில், அண்ணா! என்பாய் அத்தோடு வாதங்கள் முடிவுக்கு வந்துவிடும். ஐரோப்பாவிலும், கனடாவிலும் இருந்து உன்னை பார்க்க வந்திருந்தவர்கள் உனது திடநம்பிக்கையை கண்டு எனக்கு சொன்ன செய்திகள் எல்லாம் விரைவிலேயே பொய்யாகிப் போய் விட்டன. ஒரு புத்திஜீவித பண்போடு, இன்பத்திலும், துன்பத்திலும் நாம் மனம்விட்டு பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு சிறிய விடையங்களையும் இன்று நான் தனியாக என்னுடன் விவாதித்து வருகிறேன். வாழ்க்கையின் இறுதி மணித்தியாலங்களிலும் நீ கொண்டிருந்த உறுதியான தன்மை என்னை பலமுறை நிலைகுலைய வைத்தது என்பதை நான் கட்டாயம் சொல்லியாகவேண்டும். அத்தனை வலிகளையும் நீ மறைத்து உனது முழு சக்தியையும் ஒன்றுதிரட்டி நீ எனக்கு சொன்ன கடைசி வார்த்தை “அண்ணா, I am alright”. பிள்ளை, நீ ஒரு அன்பான, அறிவான, உறுதியான, கண்டிப்பான, கலாச்சாரமான பண்புகளை கொண்ட பெண் என எந்த சங்கடமும் இன்றி கூறுவேன். இன்று உலக அளவில் கொரோனா பெருந்தொற்றால் மில்லியன் கணக்னோரை அவர்களது அன்புக்குரியவர்கள் இழந்துவிட்டனர். இந்த நேரத்தில் உன்னோடு அவர்கள் அனைவரையும் நினைத்துக் கொள்கிறேன்.
அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள்...