அத்தை என்று சொல்லும் போதெல்லாம் என் மனதில் ஆணிவேராய் பதிந்தவை என் சிறுபிராயமே. பாலாடைக்கு போட்ட சண்டைகள், நீங்கள் பழக்கிய கையெழுத்துக்கள், படிப்பு நேரம் முடிந்ததும் நாம் போட்ட சண்டைகள் அதன் நடுவில் திக்கித்திணறும் என் அப்பாச்சி. கிடைக்கும் அந்த அரிய நேரங்களிலும் சளைக்காது எனக்கு போட்ட அலங்காரங்களும் எடுத்த புகைப்படங்களும். காலத்தின் நியதியால் தொடர்புகள் அற்று போன நிலை இருந்திருப்பினும் எங்கள் இளம் பிராயத்திலும் உங்கள் வார்தைகளால் எங்களை கவர்ந்திருக்கவே செய்தீர்கள். உங்கள் பெண்ணியமும் கணீர் என்ற குரலில் வரும் அர்த்தமிகு வார்த்தைகளும் எம் உள்ளங்கில் என்றென்றும் நிறைந்திருக்கும். உங்கள் பிரிவால் வாடும் உங்கள் பாசமிகு மருமகள் சோபனா.
அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள்...