யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை விட்டு நீ பிரிந்து
இருபது ஆண்டுகள் சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே
எமதருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி எம் கண்கள் களைத்ததடா.....!
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
உன்னைத் தேடுகின்றோம்
ஆண்டுகள் இருபது முடிந்தாலும்
எங்கள் இதயங்களிலிருந்து அகலாது
உன் நினைவுகள்..!
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உன் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம் நாங்கள்..!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உன் நினைவுகளுடன்....
அம்மா, அண்ணாமார்,
அக்கா, தங்கைமார்,
அண்ணிமார், அத்தான்,
மச்சான்மார்,
பெறாமக்கள், மருமக்கள் .
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.