யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை விட்டு பிரிந்து
பதினெட்டு ஆண்டு ஆன போதும்
உன்னை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
உன்னைத் தேடி எங்கள்
கண்கள் களைத்ததட மகனே
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதய்யா...
எப்போதும் உன் நினைவுடனே உன் அம்மா...
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எமது சகோதரனே...!
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உன் நினைவுகளுடன் நாம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.