யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குலத் தலைவனே
ஆருயிர் மகனாய்
அன்பு நிறைந்த
சகோதரனாய், மைத்துனராய்,
பண்பில் நிறைந்த ஒளிவிளக்கே
உன் நினைவுகளை நாம் சுமக்க
தூங்காமல் தூங்கியது ஏனோ?
ஆண்டு பதின்நான்கு சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்,
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது காண்போம்...
எம் வாழ்வில் விளக்கேற்றிய
எங்கள் அன்பு சகோதரனே
எம்மை விட்டு நெடுந்தூரம் சென்றதேனோ?
தம்பி, அண்ணா என்று அழைக்க அவனியில்
இன்று நீங்கள் இல்லை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
எமது உடன் பிறப்பாய் நீங்கள் வரவேண்டும்..
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
என்றும் உன் நினைவுகளுடன்....
அம்மா, அண்ணாமார், அக்கா, தங்கைமார்,
அண்ணிமார், அத்தான்,மச்சான்மார்,
பெறாமக்கள், மருமக்கள் .
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.