யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-04-2023
எங்கள் குடும்ப சொத்தை தொலைத்து
நாட்கள் உருண்டோடி
பதினேழு வருட காலம் ஆனாலும்
நீங்கள் எங்கள் நெஞ்சங்களில்
எப்போதும் வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள்!
நாங்கள் எங்கு சென்றாலும்
நீங்கள் நிழலாய் பயணிக்கும்
அந்த உணர்வு தான் எங்களை
இவ்வளவு காலமாய்
இவ்வுலகில் வைத்துள்ளது...
இந்த பதினேழு வருடமும் ஈரேழு ஜென்மம் மாதிரி
இந்த பிரிவு எங்கள் வாழ்கையில் நீங்கா வடு!
அன்பான மகனாக, ஆசையான சகோதரனாக
ஊரே மெய்க்கும் அளவுக்கு
தலைசிறந்த மனிதனாக வாழும்போது
யாரிடமும் சொல்லாமல் எங்கு சென்றீர்கள்!
நாங்கள் இவ்வுலகில் ஊனமாய் உலாவுகிறோம்!
எங்கள் அழுகுரல் கேட்கிறதா
எப்போது நாங்கள் உங்களுடன் வந்து சேர்வது
என்று ஒவ்வொரு வினாடியும் ஏங்குறோம்
ஒரு முறையாவது உங்கள் முகம் பார்க்க தவிக்கறோம்
உங்கள் குரல் கேட்க துடிக்குறோம்
ஒரு நிமிடம் கூட உங்களை நினைக்காத நாளே இல்லாமல்
உங்களை வந்து சேரும் வரை நடைபிணமாக வாழும் உங்கள் குடும்பம்!
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.