Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 JUL 1942
இறப்பு 29 MAR 2019
அமரர் நாகலிங்கம் செல்லையா
நாகலிங்கம் போசனசாலை உரிமையாளர்- யாழ்ப்பாணம்
வயது 76
அமரர் நாகலிங்கம் செல்லையா 1942 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் செல்லையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஏழு கடந்தாலும் ஆறிடுமோ
 உங்கள் நினைவலைகள் அப்பா! 
கண்ணின் மணி போல் எம்மைக் 
காத்த அன்புத் தெய்வமே 
ஆறிடுமோ எங்கள் துயரம்

எண்ண முடியவில்லை ஏழு ஆண்டுகள் 
எப்படித்தான் சென்றதுவோ? 
பக்கத்தில் நாமிருக்க துக்கத்தில்
 எமை ஆழ்த்தி தூரதேசம் சென்றதெங்கே?

பாசமழை பொழிந்து நேசமாய் 
எமை வளர்த்து துணிவுடனே 
நாம் வாழ வழியதனைக் காட்டிவிட்டு
 எமைவிட்டு சென்றதெங்கே?

இல்லறத்தின் இலக்கணமாய் 
இலங்கிய எம் இல்லத் தலைமகனே 
ஏழேழு ஜென்மம் உமை மறவோம் நாமே...

நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் 
சென்றாலும் உன் ஆசைமுகம் 
என் நெஞ்சில் நிலைத்திருக்கும் 
உங்களோடு வாழ்ந்த நாட்கள் 
திரும்பி வராதா என்று எண்ணித் 
துடிக்கிறேன் அப்பா

நீங்கள் இல்லாத இந்த உலகத்திலே 
சுவாசிக்க கூட வலிக்கிறதே! 
மீண்டும் ஒரு பிறவி எடுப்பின் 
உங்கள் மகளாய் பிறந்திடவே
வரம் கேட்பேன்

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்