

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் செல்லையா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-03-2025
அன்புள்ள எங்கள் அப்பா !!!
அப்பா உங்களை போல
எந்த உறவும் எங்களுக்கு இல்லை
உங்கள் பாசத்துக்கும் மேல் இங்கு
எதுவும் பெருசு இல்லை
உங்களுடைய முகம் தான்
கண்ணுக்குள்ள இருக்கு
உங்களை பத்தி நினைப்பு
என்றும் அகலாமல் உள்ளது...
நீங்கள் இல்லாமல் நாங்களும்
இங்கு சந்தோசமாக இல்லை
செல்லமாக எங்கள் பெயர்களை
நீங்கள் அழைக்க கேட்குதப்பா....
எங்கிருந்து கூப்பிடுகிறீர்கள் ?
சுத்தும் முத்தும் பார்க்கின்றோம் அப்பா!
நீங்கள் போன காட்சி எல்லாம்
எங்கள் கண்ணை விட்டு போகவில்லை அப்பா
ஆண்டுகள் ஆறு போன பின்பும்
எங்கள் மனம் ஆறவில்லையே...
கலங்கும் கண்ணில்தான் தூக்கம்
வந்து சேர வெகுநேரம் ஆகுதே!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்...
அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அத்தோடு பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். வருத்தத்துடன் Thavaa &...