யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் செல்லையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம் ஐயா
கல்லைறைப் பூக்களோடு எங்கள்
கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது ஐயா
உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அத்தோடு பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். வருத்தத்துடன் Thavaa &...