யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் செல்லையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
மலர்ந்த பூ முகம் மகிழ்ச்சி பொங்கி
நிற்கும் உன் புன் சிரிப்பும் பாசத்தை
விதைத்து பேசாமல் விரைந்து நீ
எங்கே போனாய்
பண்பில் நிறைந்த ஒளிவிளக்கே
உன் நினைவுகளை நாம் சுமக்க
தூங்காமல் தூங்கியது ஏனோ?
ஆண்டு நான்கு சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உன் சிரித்த முகம்
எப்போது காண்போம்...
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றது..!!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்
அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அத்தோடு பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். வருத்தத்துடன் Thavaa &...