Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 13 NOV 1942
மறைவு 10 SEP 2020
அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம் (பரமேஸ் ரீச்சர்)
வயது 77
அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம் 1942 - 2020 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்னையே!
இப் பூவுலக வாழ்வுதனை நீத்து
ஆண்டு ஆறு கடந்ததுவோ?

உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை எமக்கு
உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும் காலம் இனி
என நாம் மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?

உங்களை இழந்த கணம் முதல்
உளம் சிதைந்து துடிக்கின்றோம்!
எங்கள் வாழ்வாதாரமே
எங்கள் அன்னையே!
எம் நல் வாழ்க்கைக்கு
தன் நலனை ஈர்ந்துவிட்டு
மெழுகுவர்த்தி போன்றே
தியாகமாகிப் போனீரே!
எம் ஆரூயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு ஒளி தருவீர்..! 

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்