

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மெய்தேவர் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மெய்தேவர் இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தணிகாசலம், தங்கமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரஞ்சினி(ஆசிரியை- சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை புதுக்குடியிருப்பு), தயாநிதி, சந்திரகுமார்(அதிபர்- விக்கினேஸ்வரா பாடசாலை புதுக்குடியிருப்பு), சுமதி(லண்டன்), கோமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கருணாகரன், கந்தசாமி(ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்), கமலநாதன்(லண்டன்), ஜெயக்குமாரன்(லண்டன்), ஜமுனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரிலக்சி(லண்டன்), சத்தியராஜ்(லண்டன்), வேணிலா, பவிசன், அருணி(லண்டன்), நேருசன்(லண்டன்), சுவேதா(லண்டன்), கனொஜா(லண்டன்), கோவர்த்தனன், சவிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்சரா(லண்டன்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.