

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Bremerhaven, சுவிஸ் Fribourg ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது இந்தியா தமிழ்நாடு சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை சின்னராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில்
நினைவாய் நிலையாய் என்றும்
எங்களோடு எங்களின் இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
ஆண்டுகள் போனாலும்
நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும்
இழப்பதற்கு இதயத்திலும்
வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம்
பலரும் தவிக்கின்றோம்.
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ..!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே..!
நேற்று நடந்தது போல எங்கள்
கண்களில் நீர் இன்னமும் காயவில்லை..!
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்..!
கண்ணுக்குள் உம்மை வைத்து
காலமெல்லாம் போற்றி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
Sorry for your loss. Sending my deep condolences to your family.