யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-12-2025
எந்தையாய் என்னவராய் எல்லோர்க்கும் காவலனாய்
பந்தபா சங்களுடன் பாரினில்- மைந்தருடன்
இந்த உலகினில் இன்னலின்றி வாழ்ந்து வந்தோம்
அந்தநாள் மீண்டும் வருமோ...
வாழம் பொழுதினில் வண்ணமாய் வாழ்ந்தோம்
பாழும் விதிநம்மைப் பந்தாடி- வீழ்த்தியது
வாழ்கின்ற காலமெலாம் இன்னலுற வேண்டுமென்று
ஊழ்வினை உப்பக்கம் கண்டதோ...
பிள்ளைகள் முன்னேற வேற்றுநாடு சென்றீர்கள்
அள்ளிக் கொடுத்து அனைவரையும்- அன்பு செய்தீர்
எள்ளளவும் துன்பமின்றி இன்புற்றுச் செல்கையில்
மெள்ளப் பிரிந்து விலகியதேன்...
ஆண்டாண்டு சென்றாலும் ஆசிகள் நல்குகின்றர்
மாண்டவர் மீண்டும் வருவதில்லை- மண்ணுலகில்
காண்பதிலும் கேட்பதிலும் காட்சிகளாய்
நிற்கின்றீர்
மீண்டும் ஒருகாலம் மீளாதோ...
காலங்கள் சென்றிடினும் காட்சிகள் மாறிடினும்
கோலங்கள் மாறுமோ கொண்டவரே- கேளீர்
ஆண்டுகள் ஒன்பதில் தர்ப்பணம் செய்வதுடன்
ஆன்மசாந்திக் காய்ப்பிரார்த்திக் கின்றோம்...