யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய்க்குச் சிறந்த தலைமகனாய்ப் பிறந்தீர்கள்
தமிழ்ப்பண்பாடு ஒழுக்கத்தில் தவறாது வளர்ந்தீர்கள்
குடும்பத்தில் கோபுரக் கலசமாய்த் திகழ்ந்தீர்கள்
குறிக்கோளில் உறுதி உடையவராய் வாழ்ந்தீர்கள்
பிறந்தவீடும் உங்களால் பெருமை பெற்றது
புகுந்தவீடும் உங்களால் புன்னகை பூத்தது
வாழ்ந்த இடமெல்லாம் வசந்தம் வீசியது
வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது
ஆண்டு நான்கு ஆனது என்று நாங்கள்
ஆறுதல் அடைவதற்கு உங்கள் மூச்சும் பேச்சும்
உருவமும் உணர்வுமாய் உள்நின்று உருக்குகின்றது
நெருடல்கள் வரும்போது நெஞ்சத்தை அழுத்துகின்றது
மானிட ஆன்மா மரணிப்பது இல்லையாம்
மறுபிறவி எடுத்து எங்களிடமே வந்துள்ளீர்களோ
உங்கள்சந்ததி விளங்கிடப் பிறந்துள்ள பேரன்கள் இருவரும்
உங்களைப்போல் வாழ்ந்து பெரும்பேறு அடைவார்கள்
நீங்கள் ஆற்றிய பணிகள் நீண்டு தொடர்கின்றது
நீங்கள் இல்லா வாழ்வு நிலவில்லாத வானமாகியது
ஆண்டு நான்கில் சிராத்தம் செய்து உங்கள்
ஆத்மா நற்கதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், மைத்துனர்கள்.