யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
வளமான வாழ்வு அமைத்து நாங்கள்
வாழவழி பல செய்து வைத்தீர்
நலமாக நாம் வாழ நீங்கள்
நம்மை விட்டுப் பிரிந்தது ஏன்
குடும்ப விருட்சமாய்க் கிளைபரப்பி வாழ்ந்திருந்தோம்
விருட்சம் விழுந்ததனால் வேர்கள் வாடுகின்றன
வேர்கள் செழித்திட நீங்கள் நீராக நின்றுழைத்தீர்
விதைகள் விருட்சமாக நீங்கள் விட்டுப்பிரிந்தது ஏன்
பெற்றவர்களைப் பேணிக்காத்துப் பெருமைகள் அடையச்செய்து உற்றவளையும் உடனழைத்து உறுதுணைய் வாழவைத்து
பற்றுடனே பாசமும் வைத்துப் பாங்காக உணவளித்து
நற்றவம் புரிந்து நன்றாக வாழ்ந்து வந்தோம்
சிந்தித்துச் செயல்கள் பல திறம்படவே செய்துவைத்தீர்
சென்றகாலத்தின் நிகழ்வுகளும் வருங்கால நிலைமைகளையும் திட்டமிட்டுச் செயற்படுத்திய தீர்க்கதரிசி நீங்களப்பா
உங்களைப்போல ஒருவரை எப்பிறப்பில் இனிக்காண்போம்
ஆண்டு மூன்று ஆனாலும் ஆறிடுமா எம்துயரம்
நீண்டகனவுகள் யாவும் நிறைவேற விதியில்லை
ஆண்டு மூன்றில் சிராத்தம் செய்து உங்கள்
ஆத்மா சிவப்பேறு அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
என்று வருத்தத்துடன் நினைவு கூரும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உடன் பிறப்புக்கள், மைத்துனர்கள்