யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-11-2021
கார்த்திகை என்றவுடன் கண்கள் பனிக்கின்றன
பார்த்த இடமெல்லாம் பாங்காய்த் தெரிகின்றீர்கள்
பார்த்திருந்த காட்சியும் பிரிந்து சென்ற வேதனையும்
ஈர்த்து ஈர்த்து எம்மை இன்றளவும் வருத்துகின்றது
எண்ணிய தெல்லாம் நீங்கள் எய்து முடித்திடப்
புண்ணியப் பிறவியாய்ப் போய்ச் சேர்ந்து விட்டர்கள்
மண்ணில் நாம்வாழும் காலம் முழுவதும் உங்களை
எண்ணி எண்ணி எமக்குள்ளே வருந்துகின்றோம்
ஆசைப்பட்ட தெல்லாம் அநுபவித்துச் சென்றீர்கள்
பாசத்தைப் பெரிதெனப் போற்றி வாழ்ந்தீர்கள்
வாசதலத்தை நாம் காணும் வேளையில் உங்கள்
நேசத்தை எண்ணியெண்ணி நிலைகுலைந்து நிற்கின்றோம்
வேரினை பிடுங்கினாலும் நாங்கள் வீழ்ந்துவிடாமல்
பாரினில் வாழ்வதற்குப் பாதைகள் அமைத்துத் தந்தீர்கள்
பேரிடர் வந்தாலும் நீங்கள் ஆற்றிய பணிகளைச்
சீரிய முறையில் நாம் சிறப்பாகச் செய்து முடிப்போம்
ஆண்டு ஐந்தானது அப்பா உங்கள் அன்பும் பாசமும்
மீண்டும் மீண்டும் நீங்காமல் எங்கள் விழியோரம் நனைக்கின்றது
ஆண்டு ஐந்தில் சிராத்தம் செய்து உங்கள்
ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
என்றும் வருத்தத்துடன் நினைவுகூரும்
அன்பு மனைவி, பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், மைத்துனர்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்களே
அப்பா...!
அப்பா உன் குரல் கேட்காமல்
ஐந்து வருடங்கள் உருண்டோடி விட்டது
உங்கள் உயிர் பிரிந்தாலும்
நினைவலைகளும் அரவணைப்பும் என்றும்
எங்கள் நினைவில் இருந்து நீங்காது அப்பா
நீ கதைத்த கதைகள்
நீ களிப்பூட்டிய காரியங்கள்
நீ களைந்த கவலைகள்
நீ காட்டிய பாதைகள்
காலங்கள் கடந்தாலும் காவலனே
எம் கண்கள் மூடும்வரை
கண்ணுக்குள் நிற்குமையா
எம் வாழ்வில் நீங்கள் இல்லை
என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில்
நாம் வாழும் காலம்வரை!
உங்களது ஆன்மா சாந்தி பெற என்றும்
இறையருள் வேண்டி நிற்கின்றோம்.