திதி: 02-12-2023.
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அரும்பு மலராகி ஆம்பலாய் மிளிர்ந்ததுபோல் வாழ்ந்தீர்கள்
கரும்பு ஒத்த வாழ்க்கை காஞ்சிரங்காயாகக் கசக்கமுன்
விரும்பிய தெல்லாம் நுகர்ந்து வேண்டியதெல்லாம் அனுபவித்து
விருத்தன் ஆகமுன் விண்ணுலகம் சென்றீர்கள்.
நட்ட மரங்கள் எல்லாம் நன்றாகச்
செழித்து வளர்ந்து இந்நாட்டில்
பட்ட துயரம் நீங்கி நல்ல பெரும்
பயன்கள் தருகின்ற வேளை
ஒட்டி உறவாடி உயர்கதைகள்
பேசி மகிழாமல் எமை
விட்டு விட்டுச் சென்றது தான்
வேதனையைத் தருகின்றது.
எண்ணியவை எய்தினாலும் எவை எவைதான்
எமக்கு வந்து கிடைத்தாலும் இம்
மண்ணில் நாம் வாழும் காலம் வரை
மாறாத துயரம் எதுவெனில்
எண்ணம் போல் வாழ்ந்து எக்குறையுமின்றிப்
புண்ணியப் பிறவியாய்ப் பிரிந்து செல்லுமுன்
கண்ணியமானவரே காலனிடம் இன்னும் கொஞ்சக்காலம்
கழித்துவாறேன் எனக்கேட்டு இருக்கலாமே.
துணிந்த நடையழகும் தூய உடையழகும்
அணிந்திடும் விபூதிப் பூச்சழகும்
ஆன்மீகவானாக அம்மனைத் தரிசிக்க
அயராது செல்லும் அழகும்
பணிந்திடாத ஆண்மையின் அழகும் எமக்குப்
பார்க்குமிடம் எல்லாம் நீக்கமறத் தெரிகிறது
ஆண்டேழு சென்றாலும் ஆறாத துயரம் தான்
ஆண்டு ஏழில் சிராத்தம் செய்து அஞ்சலித்து நிற்கின்றோம்.
என்றும் வருத்தத்துடன் நினைவுகூரும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உடன்பிறப்புகள், மைத்துனர்கள்